Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதானி கிரீன் மின் உற்பத்தித் திறன் 24% உயர்வு

அதானி கிரீன் மின் உற்பத்தித் திறன் 24% உயர்வு

மின்சார விற்பனை 32 சதவீதம் உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன், ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சார விற்பனை 32 சதவீதம் உயர்ந்துள்ளது.

2026–27 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான செயல்பாட்டு விவரங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மொத்த மின் உற்பத்தித் திறன் 20,763 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மின்சார விற்பனை 25,747 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இது 19,569 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறனில் சூரிய மின்சக்தி 14,550 மெகாவாட், காற்றாலை மின்சக்தி 2,947 மெகாவாட், சூரிய–காற்றாலை இணைந்த திட்டங்கள் 3,266 மெகாவாட் பங்களிக்கின்றன.
ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 621 மெகாவாட் உற்பத்தித் திறன் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குஜராத்தின் கவ்டாவில் 3,081 மெகாவாட் மணிநேர திறனுள்ள மின்கல சேமிப்பு வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செப்டம்பர் இறுதியில் நிறுவனத்தின் மொத்த மின்கல சேமிப்புத் திறன் 6,632 மெகாவாட் மணிநேரமாக உயர்ந்துள்ளது.
உற்பத்தித் திறன் விரிவாக்கமும் மின் நிலையங்களின் செயல்பாடும் மின்சார விற்பனை வளர்ச்சிக்கு காரணங்களாக அமைந்துள்ளன.

முந்தைய செய்தி
ரூ.4,000 கோடிக்கும் அதிகமான புதிய ஆர்டர்கள் - பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம் தகவல்
அடுத்த செய்தி
ஒரே காரில் சென்று முதல்வர் விஜயுடன் கஃபேவில் காபி அருந்திய ராகுல்காந்தி

தொடர்புடைய செய்திகள்